'முதல்' தேர்தலிலேயே அபார 'வெற்றி' பெற்ற உதயநிதி ஸ்டாலின்.. மறுகணமே ட்விட்டரில் வெளியிட்ட 'புகைப்படம்'.. வைரலாகும் 'ட்வீட்'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியன்று, சட்டமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
![udayanidhi stalin tweets after his victory in chepauk udayanidhi stalin tweets after his victory in chepauk](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/udayanidhi-stalin-tweets-after-his-victory-in-chepauk.jpg)
இதில், வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே, ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி, தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, சுமார் 150 தொகுதிகள் வரை முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், திமுக சார்பில் சென்னை மாவட்டத்தின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில், தான் களமிறங்கிய முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தனது வெற்றிக்கு பின்னர், உதயநிதி ஸ்டாலின் செய்த ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. தனது தந்தையும், திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து, 'AIIMS' என எழுதப்பட்ட செங்கல் ஒன்றை, கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#DMKwinsTN #AIIMS #TNwithDMK pic.twitter.com/da6aF5k6qW
— Udhay (@Udhaystalin) May 2, 2021
தேர்தல் பிரச்சாரங்களின் போது, இதே போல செங்கல் ஒன்றைக் கொண்டு, உதயநிதி பிரச்சாரம் செய்து வந்த நிலையில், தனது அபார வெற்றிக்கு பின்னரும், அதே போன்று ஒரு நிகழ்வை, குறிப்பிட்டு தற்போது உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)