"'திமுக'ல இருக்குற எல்லாரோட பழக்கமும் இதான்.." பிரச்சாரத்திற்கு மத்தியில் 'தமிழக' முதல்வரின் 'அதிரடி' பேச்சு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களும் சூடு பிடித்து வருகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்து அதிமுகவிற்கு ஆதரவு திரட்டினார்.
தொடர்ந்து, திமுக பற்றி பேசிய முதல்வர் பழனிசாமி, 'பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் கட்சி தான் திமுக. அடுத்தவர்களை அவதூறு பேசி, அடுத்தவர்களை களங்கப்படுத்தி, அதே போல அடுத்தவர் மனதை புண்படுத்தி, மகிழ்ச்சி கொள்ளும் கட்சி திமுக தான். ஆனால், அடுத்தவர்கள் மகிழ்வதைக் காண ஆசைப்படும் கட்சி அதிமுக தான்.
நமது மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதிமுக ஆட்சி தொடர வேண்டும். ஏனென்றால், திமுக வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. அந்த கட்சியைச் சேர்ந்த ஆ. ராசா, என்ன பேசினார் என்பது, அனைத்து பெண்களுக்கும் தெரியும். தாய்க் குலத்தை அவமானப்படுத்தியவர்களுக்கு, நீங்கள் ஒன்றிணைந்து தக்க பாடத்தை புகட்ட வேண்டும்' என அதிரடியான கருத்துக்களை பிரச்சாரத்தின் நடுவே பேசினார்.
மேலும், திமுக குடும்ப அரசியல் செய்வதையும், கட்சியைச் சேர்ந்த மற்றவர்களுக்கு எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை என்பதையும் முதல்வர் பழனிசாமி, தனது பேச்சில் சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
