'முன்னணி' நிலவரத்தில் திடீரென நடந்த 'ட்விஸ்ட்'.. 'தாராபுரம்' தொகுதியின் தற்போதைய நிலவரம் என்ன??..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, இதற்கான வாக்கு எண்ணிக்கை, தமிழகம் முழுவதிலுமுள்ள 75 மையங்களில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக சுமார் 150 தொகுதிகள் வரையிலும், அதிமுக 80 தொகுதியில் வரையிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதில், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாஜகவின் தமிழக தலைவர் எல்.முருகன், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல், முருகன் தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, தாராபுரம் தொகுதியில், திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ், முருகனை விட, சுமார் 1,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இதன் காரணமாக, இதுவரை முழுக்க முழுக்க முன்னிலையில் இருந்த எல். முருகனுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.