பரபரக்கும் 'தமிழக' அரசியல் களம்.. 'பிரேமலதா' விஜயகாந்த் போட்டியிட்ட.. 'விருத்தாச்சலம்' தொகுதி நிலவரம் என்ன??..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றிருந்த நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை, இன்று நடைபெற்று வருகிறது.
அடுத்ததாக, தமிழகத்தில் யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் 75 மையங்களில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில், விஜயகாந்தின் தேமுதிக கட்சி, தினகரனின் அமமுக கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது.
இந்த கூட்டணியின் சார்பில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். இந்த தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளராக, பாமக கட்சி சார்பில் ஜே.கார்த்திகேயனும், திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில், எம்.ஆர். ஆர் ராதாகிருஷ்ணனும், போட்டியிட்டனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருவதையடுத்து, விருத்தாச்சலம் தொகுதியின் முதல் சுற்று முடிவில், பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்திருந்தார். இதனையடுத்து, தற்போதுள்ள நிலவரப்படி, பிரேமலதா விஜயகாந்த், மூன்றாம் இடத்தில் உள்ளார். அவரை விட, சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.