"இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளி வீச வைத்தது 'அதிமுக' தான்..." சூறாவளி பிரச்சாரத்தில் 'தமிழக' முதல்வர்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வேண்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது பேசிய முதல்வர், 'இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், உயர்க் கல்விக்கு செல்வோர் விகிதமும் தமிழகத்தில் தான் அதிகம். அதே போல, இந்தியாவிலேயே தொழில் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது' என முதல்வர் பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.
பின்னர் பேசிய முதல்வர், 'கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுகவின் ஆட்சியில், இருண்டுக் கிடந்த தமிழகத்தை, மின்மிகை மாநிலமாக அதிமுக அரசு மாற்றியமைத்துள்ளது. திமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ததும் அதிமுக தான்.
கடந்த 4 வருடங்களாக, அதிமுக ஆட்சியை கலைக்க, கட்சியையும் உடைக்க, திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார். ஆனால், அதனை அதிமுக தொண்டர்களின் ஆதரவோடு தவிடு பொடியாக்கினோம்' என்றும் முதல்வர் தனது பிரச்சாரத்தை போது எடுத்துரைத்தார்.