"வாழ்த்துக்கள் 'ஸ்டாலின்'ஜி.. நல்லபடியா 'ஆட்சி' அமைச்சு, 'பட்டை'ய கெளப்புங்க.." 'முதல்வர்' ஆவதற்கு முன்னரே வந்த அசத்தல் 'வாழ்த்து'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில், மொத்தம் 5 மாநிலங்களில், சட்டமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி, சுமார் 145 தொகுதிகள் வரை முன்னிலை வகிக்கும் நிலையில், இதுவரை 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், திமுக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழக சட்டமன்ற தேர்தலில், மகத்தான வெற்றியைப் பெறவுள்ள ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வெற்றிகரமான பதவிக்காலம் அமைக்கவும், அதே போல, தமிழக மக்களின் தேவையையும் ஸ்டாலின் வருங்காலத்தில் பூர்த்தி செய்வார் என்பதற்கும் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்' என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Many congratulations to @mkstalin on a resounding victory in the Tamil Nadu assembly polls. I wish him a successful tenure and the very best in fulfilling the aspirations of people of Tamil Nadu.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 2, 2021
முதல்வர் ஆவதற்கு முன்பே, ஸ்டாலினைக் குறிப்பிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் செய்த இந்த ட்வீட், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
