அஞ்சு மணி நேரம் ஆகியும் முதல் ரவுண்ட் கூட முடியாத தொகுதி...! என்ன காரணம்...? - பரபரப்பு தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் திமுக சார்பில் மா. பழனியப்பன் போட்டியிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை 08.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில் காலையில் இருந்து 5 மணி நேரம் ஆகியும் விராலிமலை தொகுதியில் முதல் சுற்றே முடிக்கப்படாமல் உள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்பட்டிருந்த எண்ணும் ஆவணங்களில் இருந்த எண்ணும் வேறுபட்டதால் தாமதமானது என கூறியுள்ளனர்.
அதன் பின் இரு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள், நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு அந்தப் பெட்டி திறந்து எண்ணப்பட்டதுடன் விவிபாட் இயந்திரமும் எண்ணப்பட்டு சரி பார்க்கப்பட்டது.
அதன்பிறகு 2ஆம் சுற்றுக்கான இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. அதிலும் ஒரு இயந்திரத்தில் இருந்த எண் மாறுபட்டது. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்பட்ட எண்கள் மாறுபட்டே வருவதைக் கண்ட திமுக வேட்பாளர் மற்றும் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரினர்.
அதன்பின் அம்மாவட்டத் தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரிக்கு இந்த சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தும் உள்ளார். இருப்பினும் இன்னும் விராலிமலை தொகுதி எண்ணிக்கையில் முதல் சுற்றைக் கூட முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.