"'கொங்கு' மண்டலம் என்னைக்கும் 'அதிமுக' கோட்டை தான்... எங்கள அசைக்கவே முடியாது.." 'தமிழக' முதல்வர் 'அதிரடி'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டத்தின் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, பெருந்துறையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை தான் என்றும், திமுகவால் இங்கு ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், சட்டமியற்றும் மாமன்றத்தில் கூட அராஜகத்தில் ஈடுபடும் கட்சி திமுக தான் என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் கட்சி, ஒருபோதும் ஆட்சி அமைக்க வந்து விடக்கூடாது என்றும், மக்களிடையே முதல்வர் எடுத்துரைத்தார்.
அதே போல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாக்குறுதி அளித்தது போலவே, அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கியுள்ளதாக பேசிய முதல்வர் பழனிசாமி, தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் இந்த திட்டத்தை நிறைவேற்றி, நேரில் வந்து தொடங்கி வைப்பேன் என்றும் உறுதியளித்தார்.

மற்ற செய்திகள்
