'எந்த தொகுதியில் யார் வேட்பாளர்...'தீவிர ஆலோசனையில் அதிமுக'!!... விரைவில் வெளியாகும் 'பட்டியல்'??..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள், தேர்தலை முன்னிட்டு தீவிரமாக தயாராகி வருகிறது.

இதில், அதிமுக கட்சியுடன் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ள நிலையில், அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக இன்று அறிவித்தது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்வது பற்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது மற்றும் தேர்தல் அறிக்கை தயார் செய்வது குறித்தும் முக்கிய நிர்வாகிகளுடன் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், பாமகவிற்கு தங்களது கூட்டணியில் 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கியுள்ள நிலையில், அவர்களின் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்வது பற்றி, பாமக கட்சி சார்பில் ஜி.கே. மணியும், பாஜகவின் தமிழக தலைவர் எல். முருகன் ஆகியோரின் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதனால், விரைவில் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த தகவல்களை அதிமுக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
