'பாஜக'வில் இணையும் 'திமுக' எம்.எல்.ஏ!!... அறிவாலயத்தில் நடக்கும் 'ஆலசோனை' கூட்டம்... 'தமிழக' அரசியலில் 'பரபரப்பு'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இன்று மாலை பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
![tamilnadu dmk mla ku.ka selvam to join bjp today tamilnadu dmk mla ku.ka selvam to join bjp today](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tamilnadu-dmk-mla-kuka-selvam-to-join-bjp-today.jpg)
முன்னதாக, திமுக எம்.எல்.ஏவும், சென்னை மேற்கு மாவட்ட செயலாளரான ஜெ. அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர் பதவிக்கு யார் தேர்வு ஆவார் என அனைவரும் கருதி வந்த நிலையில், அந்த பதவி சிற்றரசுக்கு கிடைத்தது. கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இதன் காரணமாக, அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க. செல்வம் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தால் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, அவர் இன்று மாலை பாஜக கட்சியில் இணையவுள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இன்று டெல்லியில் வைத்து பாஜக-வில் இணையவுள்ளார். இதற்காக நேற்றே அவர் டெல்லி சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி நடக்கும் பட்சத்தில் கு.க. செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை இழக்கக் கூடும். திமுக எம்.எல்.ஏ பதவியில் இருக்கும் ஒருவர், பாஜக கட்சியில் இணைவது இதுவே முதல் முறையாகும். இந்த தகவல் திமுக கட்சியில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
அதே போல, திமுக கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ். பாரதி. டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)