இறுதிகட்ட பரபரப்புரையில்... திடீரென பேச முடியாமல் தவித்த முதலமைச்சர்... உணர்ச்சிவசப்பட்டு கத்திய மக்கள் கூட்டம்! - என்ன நடந்தது??
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 6) நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இறுதி கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், இறுதி பிரச்சாரத்தின் போது, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, 'பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக, தனிநபர் தாக்குதல் என்ற பெயரில் என்னை அவமானப்படுத்தி வந்தனர். அது மட்டுமில்லாமல், தொடர்ந்து பெண்களை அவமானப்படுத்தி வரும் கட்சி என்றால் அது திமுக தான். திமுக ஆட்சியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இருந்ததில்லை. மக்களுக்கு சிறந்த ஆட்சி வழங்குவதாக கூறி, ரவுடிசம், கட்ட பஞ்சாயத்து ஆகியவற்றை கட்டவிழ்த்த கட்சியும் திமுக தான்.
தங்களது பிரச்சாரத்தின் போது எனது தாயைக் கூட திமுகவினர் பழித்துப் பேசினர். ஒட்டுமொத்த தாய்க் குலத்தையே அவுமானப்படுத்துவது போன்ற பேச்சை திமுக மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின், கட்சியில் உள்ளவர்களின் செயல்களைக் கண்டித்து எதுவுமே பேசவில்லை.
இப்படிப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சியில் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க முடியும்?. ஆனால், அதிமுக அரசு, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டுமில்லாமல், பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது' என முதல்வர் குறிப்பிட்டார். இதில், பெண்களுக்கு எதிரான திமுகவின் பேச்சு பற்றி பேசிய போது முதல்வர் பழனிசாமி சற்று உணர்ச்சிவசப்பட்டார்.
தமிழக வாக்காளர் பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்.#AIADMKFOR2021 #VOTEFORAIADMK
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 4, 2021
தொடர்ந்து பேசிய முதல்வர், 'திமுக கட்சி, இந்துக்களையும், அவர்களின் நம்பிக்கையும் நிந்தனை செய்து வருகிறது. ஆனால், அதிமுகவுக்கு இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து மதத்தினரும் ஒன்று தான். சிறுபான்மையினர் நலன் காக்கும் ஒரே அரசும் அதிமுக தான். திறமையான நிர்வாகத்திற்கான முதல் பரிசையும் வென்ற அரசு அதிமுக அரசு.
திமுக ஆட்சிக்கு வந்தால், நில அபகரிப்பு நடக்கும்; அராஜக ஆட்சி துவங்கும்; குடும்ப ஆட்சி தலைதூக்கும்; தமிழகம் அமளிக்காடாகத் திகழும்; கட்டப் பஞ்சாயத்து செய்யும் நிலை ஏற்படும்; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது; நிர்வாகச் சீர்கேடு ஏற்படும்; அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படும். pic.twitter.com/ox63M4V15M
— O Panneerselvam (@OfficeOfOPS) April 4, 2021
அதிமுகவை, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் அம்மா ஆட்சி மலரச் செய்து, புதிய வரலாறு படைப்போம். மக்கள் விரோத திமுக கட்சியை தோல்வியுறச் செய்வோம்' என அதிரடி கருத்துக்களை முதல்வர் பழனிசாமி தனது இறுதி பிரச்சாரத்தின் போது பேசினார்.