"வாசனுக்கு வாய் தான் சரியில்ல".. TTF வாசனின் தாயார் சொன்ன THUG LIFE பதில்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 16, 2023 10:55 PM

பிரபல யூடியூபராக மக்கள் மத்தியில் வலம் வருபவர் TTF வாசன். தனது பைக்கில் பயணம் மேற்கொண்டு இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு இளைஞர் மத்தியில் அதிகம் பிரபலமாகவும் இருக்கிறார்.

TTF Vasan mother opens up about her son life and marriage

                                                              Image Credit : Twin Throttlers

ஆனால் பிரபலமாக இருக்கும் அதே வேளையில், சமீபத்திய காலங்களில் சில சர்ச்சை சம்பவங்களும் TTF வாசனை சுற்றி அரங்கேறி இருந்தது. தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சனைகளில் இருந்தும் மெல்ல மெல்ல மீண்டு வந்த TTF வாசன், தனது பைக் பயணம் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் TTF வாசன் மற்றும் அவரது தாயார் பேசும் வீடியோ இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. இதற்கு முன்பு வரை தனது தாயை எங்கேயும் காண்பிக்காத வாசன், முதல் முறையாக அவருடன் பேசியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த வீடியோவில், TTF வாசன் குறித்த ஏராளமான கேள்விகள் முன் வைக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் அசராமல் பதில் அளித்திருந்தார் அவரது தாயார். அதே போல, மகன் பைக் பயணம் மேற்கொள்ளும் போது எப்படி தைரியமாக இருக்கிறீர்கள் என்பதை பற்றியும் TTF வாசன் கேட்க, இதற்கு  தெய்வம் அவருடன் துணை நிற்கும் என்றும் கூறி இருந்தார்.

TTF Vasan mother opens up about her son life and marriage

Image Credit : Twin Throttlers

அந்த சமயத்தில், வாசன் கால் வைக்கும் இடம் எல்லாம் கண்ணி வெடியாக இருக்கிறது என்றும் ஏராளமான பிரச்சனைகள் அவர் சந்திப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றும் கேள்வி கேட்கப்பட, இதற்கு பதிலளித்த தாயார், "பிரச்சனை வந்தால் தான்பா வாழ்க்கை நன்றாக இருக்கும். அது எல்லாம் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும்" எனக்கூறினார். மேலும், வாசனிடம் என்ன சரியில்லை என கேட்க, "வாசனுக்கு வாய் தான் சரியில்ல" என Thug Life பதிலையும் அவரது தாயார் கூறினார்.

TTF Vasan mother opens up about her son life and marriage

Image Credit : Twin Throttlers

இதற்கு மத்தியில் வாசனின் திருமணம் குறித்து கேள்விக்கு பதிலளித்த தாயார், "வாசனுக்கு அக்கா இருக்காங்க. அவங்க கல்யாணம் முடிச்சதும் அப்புறம் தான் வாசனுக்கு கல்யாணம். 27 வயசுல நடத்தணும்ன்னு இருக்கேன்" என தெரிவித்தார். தாயின் பதிலைக் கேட்டதும், "நானே 25 வயசுல பண்ணலாம்ன்னு இருக்கேன். அம்மா என்னடான்னா 27 வயசுன்னு சொல்றாங்க, சரி ஓகே" என TTF வாசன் கூறுகிறார்.

Tags : #TTF VAASAN #MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TTF Vasan mother opens up about her son life and marriage | Tamil Nadu News.