"உன்னால் இனி வெளிச்சத்தை பார்க்கவே முடியாது".. உலகமே எதிர்பார்த்த வழக்கு.. இளைஞருக்கு கடுமையான தண்டனை விதித்த நீதிபதி.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகத்தையே ஸ்தம்பிக்க செய்த பஃபல்லோ துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைதான இளைஞருக்கு இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது அமெரிக்க நீதிமன்றம்.
Images are subject to © copyright to their respective owners.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபல்லோ நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த மே மாதம் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். அப்போது பாய்டன் கெண்ட்ரான் என்னும் இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் சுடப்பட்ட நிலையில் 10 பேர் பலியாகினர். அவர்களுள் பெரும்பாலானோர் கருப்பினத்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
ஆகவே இது நிறவெறி காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. பின்னர் குற்றவாளியின் வாக்குமூலம் அதனை உறுதி செய்திருந்தது. இந்த சூழ்நிலையில் இளைஞர் பாய்டன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அவர்களது முன்னிலையில் இளைஞரை பேசுமாறு அறிவுறுத்தப்பட்டது.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது பேசிய பாய்டன், "பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நான் ஏற்படுத்திய வலிகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பிரியத்துக்குரியவர்களின் வாழ்வை பறித்துக் கொண்டதற்காக என்னை மன்னித்து விடுங்கள். மே 14, 2022 அன்று நான் எடுத்த முடிவுகளுக்காக நான் எவ்வளவு தூரம் வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. அன்று மிக மோசமாக நடந்து கொண்டேன். கருப்பினத்தவர்கள் என்பதாலேயே அவர்களை சுட்டுக் கொன்றேன். இப்போது நினைத்தாலும் அதனை என்னால் நம்ப முடியவில்லை. இணையத்தில் எழுதியிருந்தவற்றை வாசித்து விட்டு வெறுப்பின் காரணமாக இப்படி செய்து விட்டேன். எனது தவறுகளை மீண்டும் சரி செய்ய முடியாது என்பது எனக்கு தெரியும். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். என்னை முன்னுதாரணமாகக் கொண்டு யாரும் செயல்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்" என்று கண்ணீருடன் பேசினார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களும் அந்த இளைஞரை நோக்கி சரமாரியாக உணர்ச்சியுடன் கேள்வி கேட்டனர். இதனால் நீதிமன்றத்தில் உணர்ச்சிகரமான சூழ்நிலை நிலவியது. அப்போது பெண் நீதிபதி சூசன் ஈகன் தன்னுடைய தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அவர் அளித்த தீர்ப்பில்,"ஒரு நாகரிக சமுதாயத்தில் உனக்கோ அல்லது உன்னுடைய அறியாமை, வெறுப்பு மற்றும் தீய சித்தாந்தங்களுக்கோ இடமில்லை. உனக்கு எந்த கருணையும் கிடையாது. உன்னை புரிந்து கொள்ளவும் முடியாது. உனக்கு இரண்டாவது வாய்ப்பும் கொடுக்க முடியாது. இந்த குடும்பங்களுக்கு நீ கொடுத்த வேதனை என்பது அவை எல்லாவற்றையும் விட பெரியது. நீ காயப்படுத்திய ஒவ்வொருவரும் இந்த சமூகத்தில் மிக மிக முக்கியமானவர்கள். விடுதலையான ஒரு மனிதனாக ஒரு நாளின் ஒளியை, வெளிச்சத்தை இனி உன்னால் பார்க்கவே முடியாது" என கடுமையான வார்த்தைகளில் பேசினார்.
Images are subject to © copyright to their respective owners.
தொடர்ந்து அந்த இளைஞருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். மேலும் அவருக்கு பரோல் வழங்கப்படக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.