"உனக்கென எழுது ஒரு வரலாறு".. MBA டிராப் பண்ணிட்டு டீக்கடை வச்ச இளைஞர்.. இப்ப ரூ. 91 லட்சத்துல சொகுசு கார்.. மாஸ்..
முகப்பு > செய்திகள் > இந்தியாடீக்கடை மூலமாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய இளைஞர் ஒருவர் தற்போது பல இளைஞர்களுக்கும் ஆதர்ச நாயகனாக திகழ்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
பட்டப்படிப்பு முடித்தவுடன் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான் இன்றைய பெரும்பாலான மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. இருப்பினும் தன்னுடைய விடாமுயற்சியின் மீதும் கடின உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து ஜெயித்துக் காட்டியவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படியானவர்களில் ஒருவர் தான் பிரபுல் பில்லோர்.
பட்டதாரியான இவர் மேலாண்மை படிப்புக்காக நுழைவுத் தேர்வை எழுதியிருக்கிறார். ஆனால், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் துவண்டு போகாத பில்லோர், டீக்கடை துவங்க முடிவெடுத்திருக்கிறார். அப்போது அவருடைய இந்த முடிவை உறவினர்களில் பலர் கேலி செய்திருக்கின்றனர். ஆனால் தன்னுடைய இலக்கில் கவனமாக இருந்த பில்லோர் நினைத்தபடியே 'MBA Chaiwala' எனும் பெயரில் டீக்கடையை துவங்கி நடத்தி வந்திருக்கிறார். அகமதாபாத்தில் சிறிய கடையில் துவங்கிய இவருடைய வாழ்க்கை கொஞ்ச காலத்தில் அடுத்தடுத்த உயரங்களுக்கு சென்றிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
தினசரி 8000 ரூபாயாக இருந்த இவருடைய வருமானம் தற்போது ரூ. 30 கோடிக்கும் மேலே. இந்தியா முழுவதும் இவருக்கு 200 கிளைகள் தற்போது இருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் இந்திய அளவில் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவன தலைவராகவும் இவர் அறியப்படுகிறார். தொடர்ந்து பல முதலீடுகளையும், புதுப்புது பிசினஸ் ஐடியாக்களையும் மேற்கொண்டு வருகிறார் பில்லோர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் பில்லோர் தற்போது Mercedes-Benz GLE luxury SUV காரை வாங்கியிருக்கிறார். இதன் விலை 91 லட்ச ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்த புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பில்லோர் பகிர்ந்துள்ளார். விடா முயற்சியின் மூலமாக சாதித்துக் காட்டிய பில்லோரின் இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருவதுடன் நெட்டிசன்கள் பலரும் பில்லோருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.