'நீங்கலாம் வர்லனா என்ன ஆயிருக்கும்'.. 'குட்டி யானையை மீட்ட மனிதர்களை பார்த்து'.. 'தாய் யானை செய்த செயல்'.. நெகிழ வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Nov 13, 2019 09:25 AM

குழிக்குள் விழுந்த தனது குட்டி யானையை சிரமப்பட்டு மீட்டெடுத்த மனிதர்களுக்கு தாய் யானை நன்றி சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

elephant thanking human after elephant calf was rescued

குழிக்குள் விழுந்த குட்டி யானை வெகு நேரமாக வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்துள்ளது. முதலில் தனது குட்டி யானையைக் காப்பாற்ற தாய் யானை எவ்வளவோ முயன்று பார்த்தது. 

அதன் பின்னர் மனிதர்கள் சிலர் காப்பாற்ற வந்ததைப் பார்த்துவிட்டு ஒதுங்கி நின்று தனது சகாக்களுடன் காத்திருந்தது. அதன் பின்னர் மனிதர்கள் தனது குட்டி யானையை ஜெசிபியின் உதவியுடன் மீட்டனர். 

வெளியே வந்தவுடன் குட்டி யானை தனது தாயிடம் ஓட, தாய் யானையும் மற்ற சகாக்களும் குட்டி யானையை வாரி அணைத்துக்கொண்டு திரும்பின. ஆனால் அந்த தாய் யானை மட்டும் ஒரு கணம் நின்று திரும்பி மனிதர்களைப் பார்த்து தனது தும்பிக்கையை உயர்த்தி உயர்த்தி நன்றி சொல்லிக்கொண்டிருந்த அந்த காட்சி நெகிழ வைத்துள்ளது.

 

 

Tags : #ELEPHANT #RESCUE