'597 அடி' உயர 'வல்லபாய் படேல்' சிலை விற்பனைக்கு... 'OLX-ல்' விளம்பரம் கொடுத்த 'மர்ம நபர்...' அதிர்ந்து போன போலீசார்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 06, 2020 04:02 PM

சர்தார் வல்லபாய் படேலின் சிலையை விற்பனை செய்யவுள்ளதாக OLX இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

sardar statue sale advertisement in olx-police enquiry started

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், நர்மதா நதியின் நடுவில் மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின் 'ஒற்றுமை சிலை அமைக்கப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்த சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி கடந்த 2018ம் ஆண்டு அவரது சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

வல்லபாய் படேலின் இந்த சிலை விற்பனைக்கு உள்ளதாக மர்ம நபர் ஒருவர் OLX இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில் இந்தியாவில் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ உள்கட்டமைப்புக்கு அரசுக்கு பணம் தேவைப்படுவதாலும், மருத்துவமனை கட்டவும் இந்த சிலையை ரூ.30ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒற்றுமை சிலையின் தலைமை நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், குஜராத் போலீசார் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இதையடுத்து இந்த விளம்பரம்  OLX இணையதளத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள ஒற்றுமை சிலையின் தலைமை நிர்வாகி , அரசாங்க சொத்துக்களை விற்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அந்த அடையாளம் தெரியாத நபர் அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்கும் மக்களை தவறாக வழிநடத்துவதற்கும் OLX இல் விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். இது போன்ற விளம்பரங்கள் பல கோடி மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.