"அண்ணே, '500' ரூபாய்க்கு 'பெட்ரோல்' போடுங்க..." நள்ளிரவில் வந்த 'பைக்'... 'அதிர்ந்து' போன ஊழியர்கள்... 'பரபரப்பு' சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை அடுத்த மரக்காணம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று அமைந்துள்ளது.

இந்த பங்கில் நேற்றிரவு சுரேஷ் மற்றும் செந்தில் ஆகிய இரண்டு ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது, அதிகாலை சுமார் 2 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு பேர், 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் படி கூறியுள்ளனர். அப்போது ஊழியர் சுரேஷ் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென பின் சீட்டில் இருந்த நபர், கத்தியைக் காட்டி மிரட்டி சுரேஷின் கையிலிருந்த சுமார் 30,000 ரூபாய் பணத்தையும், அதன் பிறகு, உள்ளே இருந்த செந்திலிடம் இருந்தும் 2,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திண்டிவனம் போலீசார், சம்பவ இடம் வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் அவர்கள் மிரட்டி, பணத்தைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நள்ளிரவு நேரத்தில் திண்டிவனத்தில் நடந்த இந்த திருட்டுச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
