'போராடிகிட்டே இருப்பேன்'...'சின்ன வயசுல கிடைச்ச பெரிய கெளரவம்'... இன்ப அதிர்ச்சியில் சிறுமி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 25, 2019 10:57 AM

ராஜஸ்தான் சிறுமி பாயல் ஜாங்கிட்டுக்கு 'Change Maker' விருது வழங்கப்பட்டுள்ளது அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Payal got Changemaker Award for raising voice against child marriage

குழந்தைத் திருமணத்தை எதிர்த்து அதற்கான வலுவான போராட்டத்தை நடத்தி வருபவர் சிறுமி பாயல் ஜாங்கிட். இவருக்கு அமெரிக்காவின் நியுயார்க் நகரில்  'Change Maker' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை  நோபல் விருது பெற்ற இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, சிறுமி பாயலுக்கு வழங்கி கௌரவித்தார்.

இதையடுத்து பேசிய அவர், குழந்தைகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடும் பாயல் போன்றவர்கள் பெண்ணினத்தையும் இந்தியாவையும் பெருமைப்படுத்துவதாக தெரிவித்தார். தனது திருமணத்தையே எதிர்க்கும் துணிச்சலை பாயல் பெற்றிருந்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில் விருது குறித்து பேசிய சிறுமி பாயல், பிரதமர் மோடிக்கு சர்வதேச குளோபல் கோல்ஸ் விருது கிடைத்த நேரத்தில் தமக்கு இந்த விருது கிடைத்திருப்பதற்காக மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டார்.

Tags : #PAYAL JANGID #CHANGEMAKER AWARD #CHILD MARRIAGE #RAJASTHAN