'வெளிய பாத்தா பால் கேன்!'.. 'ஆனா உள்ள பாத்தா'... போலீஸாரை 'உறைய' வைத்த 'குடிமகனின்' வைரல் காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் பால் கேனுக்குள் மதுபான பாட்டில்களை வைத்து கடத்திச் சென்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை, பால், மருந்தகம் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே அரசு அனுமதி கொடுத்திருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் தனது உறவினர் வீட்டின் திருமண பார்ட்டியில் சென்று குடிப்பதற்காக பாபி சவுத்ரி என்கிற இளைஞர் மதுபான பாட்டில்களை பால் கேன்களில் மறைத்து எடுத்து வந்துகொண்டிருந்தபோது அவரை போலீஸார் மடக்கி பிடித்தனர். ஆனாலும் பாபி நிற்காமல் தப்பித்து ஓட, எனினும் பாபியை துரத்திப் பிடித்த போலீஸார் அவரை கைது செய்தனர்.
அத்தியவாசியத் தேவையாக பால் இருப்பதால், போலீஸார் அவரை கண்டுகொள்ளமாட்டார்கள் என திட்டமிட்டிருந்த பாபி இந்த வேலையைச் செய்து மாட்டிக்கொண்டதை அடுத்து அவருக்கு மது எங்கு கிடைத்தது என்றும், சட்டவிரோதமாக விற்பனை நடைபெறுவது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.