இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Nov 04, 2019 10:21 AM
1. தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணம் பூசி அவமதிப்பு.

2. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம், எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக சார்பில் வரும் 6ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. உலக சாம்பியன்ஷிப் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் 6-வது முறையாக பட்டத்தை உறுதி செய்தார்.
5. சனாதன இந்து தர்ம அடிப்படையிலேயே வள்ளுவம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
6. இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தி வங்க தேசம் வெற்றி பெற்றது.
7. மத்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, கமல்ஹாசன், தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
8. டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், இன்று முதல் வாகன கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.
9. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்தும் கொள்கையை சர்வதேச நாடுகள் வகுக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
10. விஷவண்டு கடித்து உயிரிழந்த புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ புருஷோத்தமன் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
