'பொண்ணுங்க குளிக்கும் போது ஓரமா நிப்பேன்'...'ஸ்மார்ட் போனுக்குள்'ஆபாச வீடியோ'...அதிரவைத்த இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 31, 2019 03:49 PM

ஆற்றில் குளித்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பதற்காக பைக்கில் ரகசிய கேமரா பொருத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man arrested for taking video of woman bathing illegally in Nagercoil

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஆற்றில் இருக்கும் படித்துறை பகுதியில் பெண்கள் குளிப்பது வழக்கம். அப்போது அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பைக் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த பைக்குக்கு சற்றுத்தள்ளி ஒரு வாலிபர் நிற்பதும் வழக்கமாக இருந்துள்ளது. இது அங்கு குளிக்க வரும் பெண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பகுதியில் இருந்த இளைஞர்களிடம் அந்த பெண்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். உடனே அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனிடையே அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் பைக்கை எடுத்து கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி இளைஞர்கள், பைக்கின் கைப்பிடி பகுதியில் இருந்த  கறுப்பு நிறப் பெட்டியை திறந்து பார்த்தார்கள்.  அதில் வீடியோ ரெக்கார்டிங் செய்தபடி ஒரு ஸ்மார்ட் போன் இருந்தது. அதில் ஆற்றில் பெண்கள் குளிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்குத் தகவல்கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அந்த நபர் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த வெங்கடேசன் எனத் தெரியவந்தது. மேலும் ஆற்றில் குளிக்கும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பதற்காகத் திட்டம் போட்டிருந்ததும் தெரியவந்தது. அதற்காகக் கறுப்பு நிறப் பெட்டி ஒன்றைத் தயாரித்துள்ளார். அந்த பெட்டிக்குள் ஸ்மார்ட் போனை வீடியோ மோடில் ஆன் செய்து வைத்து விட்டு, பைக்கை பெண்கள் குளிக்கும் பகுதியில் நிறுத்தி விட்டு ஓரமாக போய் நின்று கொள்வார்.

இதனால் யாருக்கும் சந்தேகம் வராத நிலையில், அந்த நபர் தொடர்ந்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தது அங்கு குளிக்க வரும் பெண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கையும் களவுமாக தற்போது சிக்கியுள்ளார்.  அவரது மொபைல் போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதைக் கண்டுபிடித்த ஆரல்வாய்மொழி போலீஸார் வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #SEXUALABUSE #SMARTPHONE #ARRESTED