‘செக்யூரிட்டிகளை சரமாரியாகத் தாக்கிய இளைஞர் கும்பல்..’ காரை அனுமதிக்காததால் நடந்த பரிதாபம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jun 26, 2019 02:48 PM
குடியிருப்புக்குள் காரை அனுமதிக்காததால் பாதுகாவலர்களை இளைஞர் கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திலுள்ள பிரோவியூவ் லபோனி என்ற குடியிருப்புப் பகுதிக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓம்வீர் சிங் என்பவர் நண்பர்களோடு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அன்றைய தினம் இரவு 9 மணியளவில் ஓம்வீர் சிங்குடன் வந்த ஏழெட்டு பேர் உள்ளே அனுமதிக்காத பாதுகாவலர்களை கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதில் காயமடைந்த பாதுகாவலர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
