'ஜஸ்ட் மிஸ்'.. சிறுமியின் சமயோஜிதத்துக்கு குவியும் பாராட்டுக்கள்.. ஆனாலும் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 20, 2019 01:11 PM

அரியலூரில் உள்ள பெரியார் நகரில் வசித்துவரும் முருகேசன், உடையார் பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருபவர்.

little girl got a great escape from an accident - Viral CCTV photos

இவர் தனது பேத்தியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனகத்தில், அப்பகுதியில் உள்ள சின்னக்கடை வீதியில் உள்ள மெடிக்கலுக்குச் சென்றுள்ளார். மெடிக்கலில் மருந்துகளை வாங்கிக் கொண்ட முருகேசன், தனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்துவிட்டு, பேத்தியை ஏறச்சொல்லியிருக்கிறார்.

அப்போது எதிரபாராத விதமாகவும், அதிவேகமாகவும் அந்த வழியே வந்த லோடு லாரி ஒன்று முருகேசன் மோதியதில், முருகேசன், தனது இருசக்கர வாகனத்துடன், சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டார். ஆனால், சிறுமிக்கு என்ன ஆச்சு? என்று அனைவரும் பதறிய நிலையில்தான்,  சிறுமியின் சமயோஜிதத்தை பலரும் பார்த்துள்ளனர்.

அதாவது, தாத்தாவின் வண்டியில் ஏறப்போன சிறுமி, லோடு லாரி அதிவேகத்தில் வந்ததைப் பார்த்ததும், பயந்து ஓடியிருக்கிறாள். அதனால் லோடு லாரி முருகேசன் மீது மோதி, அவரை மட்டும் தூக்கி வீசியுள்ளது, சிறுமி தப்பித்து விட்டாள். இல்லையேல் சிறுமியின் நிலை இன்னும் மோசமாகியிருக்கும்.

எனினும் தாத்தாவுக்கு, பலமாக அடிபட்டதை பார்த்ததும் சிறுமி அந்த இடத்திலேயே வெடித்து அழுதுள்ள  காட்சி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. வேகத்தடை இல்லாததால், இந்த வழியில் வாகனங்கள் இவ்வளவு வேகமாக வருவதாக அம்மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : #ACCIDENT #ARIYALUR #CCTV