'11.5 லட்சம் ரூபாய்..'.. 'ஆனா அந்த பெண்மணி இத செஞ்சுருக்கணும்'.. சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jun 17, 2019 05:42 PM
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி மற்றும் அவரது மனைவி சுசீலா இருவரும், தாங்கள் தற்போது குடியிருக்கும் வீட்டை இடிக்கப்போவதாக தெரியவந்ததால், துரைப்பாக்கம் பகுதியில் வீடுவாங்கும் எண்ணத்தில் சிறுச்சிறுக சேமித்து, 11.5 லட்சம் ரூபாயைத் தயார் செய்துவிட்டு, இன்னும் 50 ஆயிரத்துக்காக போராடிக்கொண்டிருந்துள்ளனர்.

அந்த சமயத்தில்தான், அவர்களின் வீட்டுக்குச் சென்று பழைய துணி மூட்டையை ஆசிரமத்துக்காக மகாலட்சுமி கேட்டுள்ளார். ஆனால் அந்த திருடர்களுக்கு பயந்து சுசீலா பழைய துணி மூட்டையில் 11.5 லட்சம் ரூபாயை வைத்திருப்பதை அறியாத சுசீலாவின் மகன் கணேசன், அதை எடுத்து மகாலட்சுமியிடம் கொடுத்திருக்கிறார்.
அதன் பின்னர், சுசீலா கொடுத்த புகாரின் பேரில், ஆசிரமத்துக்கு உதவி தேவை என்று கொடுத்து நோட்டீஸ்களை வைத்து மகாலட்சுமியை போலீஸார் கண்டுபிடித்து விசாரித்தனர். அப்போது, பழைய துணி மூட்டையுடன் வீட்டுக்குச் சென்ற அதைப் பிரித்துப் பார்த்ததும் தனக்கு மனம் மாறியதாகவும், தனக்கு இருந்த 47 ஆயிரம் கடன்களை அடைத்துவிட்டதாகவும் மகாலட்சுமி கூறியுள்ளார்.
இதுபற்றிய சுசீலாவும், போலீஸாரும் கூறும் ஒற்றைக் கருத்து, ‘பணத்தை பார்த்த மகாலட்சுமி ஒன்று சுசீலாவிடமோ அல்லது போலீஸிடமோ தகவல் சொல்லியிருந்தால் பாராட்டப் பட்டிருப்பார்’ என்பதுதான். தவிர, மகாலட்சுமி பழைய துணிகளை அரவிந்தன் என்கிற பத்திரிகையாளரிடம் கொடுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவரையும் மகாலட்சுமியையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
