‘44 வருட கனவு’.. உலகக்கோப்பையில் புது வரலாறு படைக்க போகும் அணி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 14, 2019 04:19 PM
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெல்லும் அணி புது வரலாறு படைக்க உள்ளது.
12 -வது சீசன் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று(14.07.2019) லாட்ர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெரும் அணி உலக்கோப்பையில் 44 வருட கனவை நிறைவேற்றி சாதனை படைக்க உள்ளது. இதில் நியூஸிலாந்து அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2015 -ம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. அதேபோல் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்வது இது 4 -வது முறையாகும். முன்னதாக 1979, 1987 மற்றும் 1992 -ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. ஆனால் ஒருமுறை கூட கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் அணி, 44 வருடம் கழித்து முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று புதிய வரலாறு படைக்க உள்ளது.