‘ஓனரை திசை திருப்பி நகை சுருட்டிய இரு பெண்கள்’.. சென்னையில் நடந்த பலே திருட்டு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 20, 2019 04:57 PM

உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி இரண்டு பெண்கள் நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Distract the shop owner and theft of jewelry in Chennai

சென்னை பழைய வண்ணார் பேட்டை அருகே திருவெற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் தருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் எஸ்.எம் ஜூவல்லரி என்ற நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று தனது கடையில் நகை காணமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தருண்குமார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனை அடுத்து புகாரின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில் இரண்டு பெண்கள் கடையின் உரிமையாளரிடம் பேசிக் கொண்டே இருந்துள்ளனர். பின்னர் அவரின் கவனத்தை ஒரு பெண் திசை திருப்பியதும் மற்றொரு பெண் கடையில் இருந்த 150 கிராம் தங்க செயினை திருடி தனது பையில் வைத்துள்ளார்.

இதனை அடுத்து இருவரும் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளில் தெரிந்த புகைப்படைத்தை வைத்து நகை கடையில் திருடிய இரு பெண்களையும் போலிஸார் தேடி வருகின்றனர்.

Tags : #JEWELLERY #THEFT #CHENNAI