‘என் மகள இப்படி ஆக்கிட்டாங்களே’... 'வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘மருத்துவமனையில் அளித்த பதைபதைக்க வைக்கும் வாக்குமூலம்’... ‘கதறித் துடிக்கும் பெற்றோர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 11, 2020 09:26 AM

விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி இருவர் தீ வைத்ததாகக் கூறப்படும் கொடூர  சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. இதில் சிறுமியின் உடலில் தீக்காயங்களால் சிதைந்து போய் உயிரிழந்துள்ளார்.

These two persons arrested for setting fire on 15 year old little girl

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் ஜெயஸ்ரீ (15) வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து தீப்புகை வந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடலில் நெருப்புடன் ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சிறுமியை மீட்ட உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதற்குள் தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணையும் நடத்தினர்.

அப்போது, ‘வீட்டில் தனியாக இருந்த தன்னை, முருகன், கலியபெருமாள்  2 பேரும் சேர்ந்து எனது கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, பெட்ரோலும் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றதாக கூறினார். சிறுமி ஜெயஸ்ரீ சொன்ன வாக்குமூலத்தை விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் பதிவு செய்து கொண்டார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன், கலியபெருமாளை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த பெற்றோர் கதறித் துடித்தனர். சிறுமியின் பெற்றோர் கூறுகையில், ‘எங்களுக்குள் ஏற்கெனவே முன்பகை இருந்து வந்தது. அவர்கள் என் மகனை தாக்கினர். அதனால் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்துவிட்டு அதுகுறித்து புகார் கொடுக்க காவல்நிலையத்துக்கு சென்றேன்.

அந்த ஆத்திரத்தில்தான் அவர்கள் யாரும் இல்லாத சமயத்தில் இப்படி தீ வைத்து என் மகளை எரித்து விட்டனர். அவர்களை சும்மா விடக்கூடாது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி கதறியபடியே அழுதுக் கொண்டிருந்தார். தனியாக இருந்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால், உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டு பார்ப்பதற்கு மிகவும் நெஞ்சை உலுக்கியுள்ளது. சிறுமியின் வாக்குமூலம் வீடியோ வெளியாகி பதறவைத்துள்ளது. அதில் ‘என் அப்பா எங்கே’ என்று கேட்பது நொறுங்க வைத்துள்ளது. இந்தநிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் 90 சதவீத காயங்கள் ஏற்பட்டதால் அந்த சிறுமி தற்போது சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். ஏற்கனவே முன்பகையால் சிறுமியின் சித்தப்பா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.