'மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கத்தில்...' 'ஏப்ரல் 30ம்' தேதி வரை 'ஊரடங்கு' நீட்டிப்பு... 'உத்தவ் தாக்கரே, மம்தாபானர்ஜி அறிவிப்பு...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 11, 2020 05:49 PM

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்திலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

Curfew in Maharashtra, West Bengal till 30th April

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு சில மாநில அரசுகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளன. பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே, ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கும் என்று அறிவித்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களுடன் மோடி ஆலோசித்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது மகராஷ்டிரா மாநில அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. நாட்டிலே கொரோனாவால் அதிக பாதிப்புகளை உடைய மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது குறிப்பிடத்தக்கது.