'புல்லட் பாண்டி' பற்றி 'என்ன நினைக்கிறீர்கள்...?' 'ஐசிசி'-யை 'நக்கல்ஸ்' செய்யும் 'அஸ்வின்...' 'தலைவன் இல்லாத இடமே இல்லை...'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Apr 13, 2020 04:18 PM

ஐசிசி-யின் கேள்வி ஒன்றுக்கு நடிகர் வடிவேலுவின் 'புல்லட் பாண்டி' புகைப்படத்தை அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ravichandran ashwin fun comment about icc Twitter post

கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 29-ம் தேதி நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் ஐ.பி.எல் தொடர் எப்போது தொடங்கும் என்று இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே ஐ.சி.சி தனது ட்விட்டர் பக்கத்தில், ''கிரிக்கெட் அல்லாத வேறொரு விளையாட்டைச் சார்ந்த ஒருவர் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்?'' என்று ஒரு கேள்வி எழுப்பியது.

ஐ.சி.சி-யின் இந்த பதிவிற்கு பலர் தங்களது கருத்தை பதிவிட்டு வந்த நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கோவில் திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி கதாபாத்திரமான 'புல்லட் பாண்டி' புகைப்படத்தைப் பதிவிட்டு இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் திரைப்படங்களில் வரும் மற்ற விளையாட்டை சேர்ந்த வீரர்களில் யார் சிறந்த கிரிக்கெட் வீரராக வந்திருக்கலாம் என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் தமிழ் நடிகர்களின் புகைப்படங்களை பதிவிட்டு தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.