ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
1. கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது.
2. கொரோனா வைரஸ் பொருளாதார பாதிப்பால் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகப்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
3. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எம்.வி. ராஜசேகரன் உடல்நல குறைவால் இன்று மரணம் அடைந்து உள்ளார்.
4. மருத்துவர்கள் மீது பழியை போட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தப்பியோடப் பார்க்கிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
5. தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, ஒரு போலீஸ்காரர் சரக்கு ரெயில், லாரி, படகு ஆகியவற்றில் மாறி மாறி 1,100 கி.மீ. பயணம் செய்து சொந்த கிராமத்துக்கு சென்றார்.
6. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மூன்று வார ஊரடங்கு ஒரு நியாயமான தொடக்க புள்ளியாகும் என பிரபல இந்திய-அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் ராஜீவ் வெங்கய்யா தெரிவித்து உள்ளார்.
7. உத்தரப்பிரதேசத்தில் குடும்பத் தகராறால் 5 குழந்தைகளுடன் தாய் ஆற்றில் குதித்த சம்பவம் செரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8. எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர்.
9. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் இந்திய அணி வீரர் டோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
10. ரத்த வங்கிகளில் போதிய ரத்தம் இருப்பு இல்லாததால் ரத்ததானம் தந்து உதவும்படி சில ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் அழைப்பு விடுத்ததையடுத்து இந்திய கால்பந்து அணி வீரர் ஜெஜெ லால்பெகுலா ரத்ததானம் செய்தார்.
11. தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு, சமையல் பொருட்கள் வழங்க அரசு தடை விதித்துள்ளது. ஊரடங்கை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.