ரோட்டோரம் கிடந்த சூட்கேஸ்.. காலையில் வாக்கிங் போக வந்தவர்கள் கண்ட நடுங்க வைக்கும் காட்சி
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சாலையோரம் கிடந்த சூட்கேசில் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடைபயிற்சியின் போது பொதுமக்கள் கண்ட சூட்கேஸ்:
திருப்பூரில் இருந்து மதுரை. தேனீ செல்லக் கூடிய தேசிய நெடுஞ்சாலையில் புதுநகர் என்ற பகுதி உள்ளது.அந்த பகுதியை அடுத்த ஒத்தகடை என்னும் இடத்தில் இந்த சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து வீசி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சூட்கேஸ் ஒன்று சாலையோரம் இருக்கும் சாக்கடையில் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட பலத்த சந்தேகம்:
மேலும் அந்த சூட்கேசின் மேல்பக்கம் ரத்தக் கறைகள் இருந்ததினால் பொதுமக்களுக்கு பலத்த சந்தேகம் வந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் விரைந்து வந்தனர். பொதுமக்கள் சந்தேகித்தது போலவே சூட்கேசை திறந்து பார்த்தபோது 25 வயது பெண் சடலம் இருந்துள்ளது.
இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அந்த இடமே பொதுமக்கள் சூழ்ந்து பரபரப்பாக காணப்பட்டது. உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் ஆணையர், துணை ஆணையர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருவேலம் செடி இருக்கும் புதர் பகுதி:
மேலும் அந்த சாலையோரம் கருவேலம் செடி இருக்கும் புதர் காணப்படுவதால் இந்த சம்பவம் அந்த பகுதியில் நடந்துள்ளதா? அல்லது வேறு எங்கேனும் நடந்து இங்கே வந்து போட்டுக் கொண்டு சென்றார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்டவைகள் மூலம் கொலையாளியைக் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தியுள்ளனர்.
இந்த பெண் யார்?
மேலும், தற்போது வரை இந்த பெண் யார் எங்கே உள்ளவர் என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை, அந்த சடலம் ஒரு பெண் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
