Kadaisi Vivasayi Others

கொரோனாவை செயலிழக்க செய்யும் புதிய வகை மாஸ்க்.. ஒரு லேயரில் தாமிர நானோ துகள்கள்.. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 10, 2022 09:04 AM

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை முடிந்தப்பாடில்லை. அதோடு புதுப்புது வெரைட்டிகளாக 6 மாதத்திற்கு ஒரு முறை பரவி வருகிறது.

Invention of mask coated with nanoparticles based on copper

கொரோனாவின் மூன்றாவது அலையில் இருக்கும் இந்தியாவில் தொற்றிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவை செயலிக்க செய்யும் தன்மை:

அதோடு சமீபத்தில் வந்த ஒரு ஆய்வில் இந்தியாவில் இருக்கும் மக்களின் எதிர்ப்புசக்தி கடந்த இரு வருடத்தை விட நான்கு மடங்கு அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக கொரோனாவை செயலிழக்க செய்யும் விதமாகவும், எளிதில் மக்கும் தன்மை கொண்டதாகவும் புது வகை கொரோனா மாஸ்க் கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இதுக்குறித்து கூறும் போது, 'இந்திய விஞ்ஞானிகள் குழு தற்போது கண்டறிந்துள்ள புதிய முகக் கவசத்தை தொடும் கொரோனா வைரஸுக்கு எதிராக தீவிர எதிர்வினையாற்றும். மேலும், இந்த புது முக்ககவசம் தாமிரத்தை அடிப்படையாகக் கொண்ட நானோ துகள்களால் பூசப்பட்டதாகும். அதோடு, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை அழிப்பதோடு, எளிதில் மக்க கூடியது.

சிரமமில்லாமல் சுவாசிக்கலாம்:

இந்த புதிய மாஸ்க் சிரமமில்லாமல் சுவாசிக்கவும், வேண்டுமென்றால் அடிக்கடி துவைத்து கூட பயன்படுத்தலாம். முக்கியமாக கொரோனா வைரஸ் காற்றில் பரவும் சுவாசத் துகள்கள் வழியாக பரவுவதாக எச்சரித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், வழக்கமான மாஸ்க்கை அணிவதன் மூலம் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது கடினம்' என்றும் தெரிவித்துள்ளது.

அதோடு, 'குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகமுள்ள மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களில், விலை அதிகமான மாஸ்குகளை பயன்படுத்தினாலும் அவை ஆன்டி வைரல் அல்லது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்காது.

தொற்று பரவ வாய்ப்புள்ளது:

தற்போது உள்ள வைரஸ்களை வடிகட்டுமோ தவிர அவற்றைக் கொல்லாது. எனவே, முகக்கவசங்களை சரியாக அணியப்படாவிட்டால் அல்லது அகற்றப்படாவிட்டால் தொற்று பரவ வாய்ப்புள்ளது' என சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தாமிர நானோ துகள்கள் பூசப்பட்ட துணியுடன் கூடிய மூன்று அடுக்குகள் மற்றும் ஒற்றை அடுக்கு முகக்கவசங்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், மூன்று அடுக்கு மாஸ்கள், ஒற்றை அடுக்கு மாஸ்குகளை விட சிறப்பாக செயல்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Tags : #MASK #NANOPARTICLES #COPPER #மாஸ்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Invention of mask coated with nanoparticles based on copper | India News.