அதிகாலையில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்.. கதவைத் திறந்து பார்த்ததும்.. அரண்டு போன ஊர் மக்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் : அதிகாலை வேளையில், திடீரென பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, கதவைத் திறந்து பார்த்த ஊர் மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 31). இவரது மனைவியின் பெயர் தனலட்சுமி (25).
இவர்கள் இருவருக்கும் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. மேலும், குமார் - தனலட்சுமி தம்பதியருக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
பழக்கம்
இந்நிலையில், தனலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காட்டுராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம், மெல்ல மெல்ல மாறி, நாளடைவில் கள்ளக்காதல் வரைக்கும் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து, மனைவியின் தவறான போக்கு குறித்து, குமாருக்கு தெரிய வந்துள்ளது.
பேச்சுவார்த்தை
இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், தனலட்சுமியை கண்டிக்கவும் செய்துள்ளார். இதன் காரணமாக, கணவர் - மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரிதாக ஆரம்பித்ததால், குடும்பத்தினர் இணைந்து, இரண்டு பேரிடமும் சமாதான பேச்சு வார்த்தையை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூரில் வேலை
இதன் பிறகு, குமார் மற்றும் தனலட்சுமி ஆகியோர், வேலைக்கு வேண்டி திருப்பூர் வந்துள்ளனர். மகன்கள் இரண்டு பேரையும், கடையநல்லூரில், தனலட்சுமியின் பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. திருப்பூர் வஞ்சிப்பாளையம் பகுதியை அடுத்த ஜே கே நகரில், வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கி வந்துள்ளனர். அங்குள்ள பனியன் நிறுவனம் ஒன்றிலும் குமார் பணிபுரிந்து வந்துள்ளார்.
வாக்குவாதம்
இதனிடையே, தனலட்சுமியின் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக, மீண்டும் குமார் மற்றும் தனலட்சுமி இடையே தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்று அதிகாலையில், மீண்டும் இருவருக்கிடையே, மோதல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற குமார், அரிவாளை எடுத்து, தனலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
உறைந்து போன ஊர் மக்கள்
தனலட்சுமியின் உடலின் பல இடங்களில், அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே, அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அதிகாலை வேளையில், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர், குமாரின் வீட்டிற்கு வந்தனர். அப்போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த தனலட்சுமியைக் கண்டதும், ஒரு நிமிடம் உறைந்து போயினர். அரிவாளுடன் குமாரும் அருகே இருந்துள்ளார்.
போலீசார் விசாரணை
அங்கு வந்த ஊர் மக்கள், உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், தனலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
மேலும், குமாரைக் கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக, மனைவியை, கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம், திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
