"அய்யோ‌.. அத்தன காய்கறியும்‌ வீணாச்சே".. நடுரோட்டில் அடிவாங்கியபடி.. கதறி அழுத 'பெண்' வியாபாரி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jan 16, 2022 07:15 PM

மத்தியப் பிரதேசம் : தள்ளுவண்டி வியாபாரம் செய்து வந்த வயதான பெண் ஒருவரை, சிலர் சேர்ந்து தாக்கும் வீடியோ, சமூக வலைத்தளத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

madhya pradesh indore woman beaten up by doctor for parking

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியில், சற்று வயதான துவாரகா பாய் என்னும் பெண்மணி, தன்னுடைய மகன் ராஜுவுடன் சேர்ந்து தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென அவரை ஒரு கும்பல், பயங்கரமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அப்படி தாக்கியதில் ஒருவர், மருத்துவர் என்றும் கூறப்படுகிறது. மருத்துவர் இப்படி பொது இடத்தில் செயல்படுவதைச் சுட்டிக் காட்டி, பலரும் அவரின் இந்த செயலை எதிர்த்து வருகின்றனர்.

தாக்குதல்

கடந்த சில தினங்களுக்கு முன், மாலை நேரத்தில், பன்வர்குவான் என்னும் பகுதியில், இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், மருத்துவர் ஒருவரும், அவருடன் இருந்த ஆட்கள் சிலரும், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த துவாரகா பாயை தாக்கியுள்ளனர்.

காரால் வந்த வினை

அது மட்டுமில்லாமல், தாக்கி முடித்த பிறகு, அவர் வியாபாரம் செய்து வந்த வண்டியை, சாலையைக் கவிழ்த்து விட்டதாகவும் வீடியோ மூலம் தெரிய வருகிறது. இந்த சம்பவம்  எதற்காக நடந்தது என்பது பற்றி, அங்கிருந்தவர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். துவாரகா பாய் வியாபாரம் செய்து வந்த தள்ளுவண்டிக்கு முன்பாக, மருத்துவர் ஒருவர் தனது காரை நிப்பாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

madhya pradesh indore woman beaten up by doctor for parking

தள்ளுவண்டி கவிழ்த்து அராஜகம்

அப்போது, அந்த காரினை சற்று தள்ளி நிப்பாட்டும் படி, சம்மந்தப்பட்ட பெண் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபமடைந்த மருத்துவர், தன்னுடைய கிளினிக்கில் வேலை பார்க்கும் ஊழியர்களை அழைத்து, அங்கு வரச் சொல்லியுள்ளார்.

madhya pradesh indore woman beaten up by doctor for parking

பின்னர், அங்கு வந்தவர்களுடன் சேர்ந்து, தாயையும், மகனையும் மருத்துவர் தாக்கியுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். காரின் பெயரில் ஆரம்பித்த விவகாரத்தால், தங்களின் தொழிலுக்கான ஆதாரத்தை இழந்து, கதறி அழும் பெண்ணின் வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

 

தரக்குறைவான செயல்

இதே போல, கடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தில், காரில் இறங்கி வந்த பெண் ஒருவர், தள்ளுவண்டியில் பழம் வியாபாரம் செய்து வந்த ஒருவரிடம் இருந்து, அத்தனை பழங்களையும் சாலையில் தூக்கி வீசும் வீடியோ வெளியாகி, மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திறியுந்தது.

மிகவும் கடினமாக, தங்களின் தினசரி வாழ்வாதாரத்திற்காக கடுமையாக, வெயில், மழை பாராமல் உழைக்கும் ஏழை மக்களை, இப்படி துன்பப்படுத்தும் காரியம், மிகவும் தரக்குறைவான செயல் என பொது மக்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Tags : #VIRAL VIDEO #WOMAN #DOCTOR #CAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Madhya pradesh indore woman beaten up by doctor for parking | India News.