'5 மாச கருவை அட்டைப்பெட்டியில அடைச்சு...' 'குப்பைத் தொட்டியில சுருட்டி வீசியிருக்காங்க...' 'தெருநாய் தான் முதல்ல பார்த்துருக்கு...' 'பார்த்த உடனே அந்த கருவை...' அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரம்பூரில் சாலையில் ஓரமாக இருந்த ஐந்து மாத ஆண் கருவை தெரு நாய் ஒன்று நடுரோட்டில் இழுத்து போட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூர் பகுதி ராகவன் சாலையில் 5 மாத ஆண் கருவை அட்டைப்பெட்டிக்குள் யாரோ வீசி சென்றுள்ளனர். இதனை மோப்பம் பிடித்த அங்கிருந்த தெருநாய்கள் கருவை அட்டைப்பெட்டியை பிய்த்து அதில் இருந்த கருவை கவ்வி நடுத்தெருவில் கொண்டு வந்து போட்டுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ந்த அங்கிருந்த தெருவாசிகள் திரு.வி.க காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 மாதமே ஆன ஆண் கரு குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கருவை தெருவில் வீசி சென்ற மர்ம நபர்களை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இது ஒரு கருவில் இருக்கும் சிசு என்பதால் யாரேனும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து அட்டைப்பெட்டியில் வைத்துள்ளாரா என்ற வகையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதேப்போல் ஆறு மாதங்களுக்கு முன் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பெண் சிசு பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்திருப்பது போலீசாரை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
