உடலுறவின் போது மாஸ்க் அணிவது நல்லது!.. உயிர் அணுக்களின் மூலம் கொரோனா பரவுமா?.. SINGLES-க்கும் தீர்வு உண்டு... கவலைப் படாதீங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பின் இந்த சமயத்தில் பாலியல் உறவின் போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது என நியூயார்க் நகர சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள் மூலம் அறிவுறுத்த்தி உள்ளது.

கொரோனா தொற்றுநோய்களின் போது மக்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்ள உதவும் வகையில், நியூயார்க் நகர சுகாதாரத் துறை அதன் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. நோயின் மாறிவரும் புரிதலைப் பிரதிபலிக்கும் வகையில், அவை அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. இந்நிலையில், உடலுறவு மூலம் கொரோனா பரவுவது குறித்து இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை.
கொரோனாவில் இருந்து மீண்ட சில ஆண்களின் மலம் மற்றும் விந்தணுக்களில் கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது வைரஸ் பாலியல் ரீதியாக பரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஆய்வு போதுமானதாக தெரியவில்லை, சில விஞ்ஞானிகள் இது சாத்தியமில்லை என்று நினைக்கிறார்கள்.
இத்தைய பேரிடர் காலத்தில், 'பாலியல் "ஆபத்தானது" என்ற எண்ணம் குறிப்பாக மக்களுக்கு மனநலக் கஷ்டங்களுக்கு ஆளாகக்கூடிய ஒரு நயவஞ்சகமான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று பரிந்துரைத்துள்ளனர்' என மே மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, நியூயார்க் நகர சுகாதாரத் துறையானது, கொரோனா வைரஸ்கள் உடலுறவு மூலம் எளிதில் பரவுவதில்லை என்று அறிவித்துள்ளது.
கொரோனா உமிழ்நீர் மற்றும் சுவாசத்தின் மூலம் பரவக்கூடும் என்பதால், உடலுறவில் ஈடுபடும்போது, மக்கள் முகம் மறைப்பு அல்லது முகக்கவசம் அணியலாம் என்று நியூயார்க் நகர சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது.
பாலியல் நிலைகள் மற்றும் சுவர்கள் போன்ற உடல் தடைகள் ஆகியவற்றைக் கொண்டு ஆக்கப்பூர்வமாக இருங்கள். அதே நேரத்தில், நேருக்கு நேர் தொடர்பைத் தடுக்கின்றன. மக்கள் ஒன்றாக சுயஇன்பம் மூலம் உடல் ரீதியாக தொலைவில் இருக்க முடியும் என வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.

மற்ற செய்திகள்
