'மறுபடியும் 2 யானைங்கள கொன்ருக்காங்க...' 'அதுல ஒண்ணு கர்ப்பிணி...' 'யானைங்க உலாவுற எடத்துல 'அது' ஒண்ணு தான் இருக்குது, அப்படின்னா...' தொடரும் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவை தொடர்ந்து சத்தீஸ்கரில் இரண்டு யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதில் ஒரு யானை கர்ப்பிணி யானை என்ற செய்தி வெளிவந்து மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிமருந்து கலந்த அன்னாசி பழத்தை உண்டு வாய் வெடித்து இறந்த செய்தியே இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்காத நேரத்தில் சத்தீஸ்கரில் மீண்டும் இரண்டு யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. மேலும் இதில் ஒன்று கர்ப்பமாக உள்ள பெண் யானை என்றும் அறிவித்துள்ளனர் சத்தீஸ்கர் வனத்துறை அதிகாரிகள்.
காட்டுப்பகுதியில் நடக்கும் யானைகள் சத்தீஸ்கரில் உள்ள சூரஜ்பூர் வனப் பிரிவான கணேஷ்பூர் கிராமம், பிரதாப்பூர் பகுதியில் மர்ம நபர்களால் அங்கு இருக்கும் குளத்தில் விஷம் வைத்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. .
இது குறித்து கூறிய சத்தீஸ்கர் வனத்துறையின் மூத்த அதிகாரிகள், "இறந்து போன இரண்டு யானைகளும் ஒரே மந்தையைச் சேர்ந்தவை என்றும், விஷம் கலந்த எதையோ சாப்பிட்டு இறந்துள்ளது ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளிவரும் வரை எதுவும் கூற முடியாது" என கூறியுள்ளார்.
மேலும் இரண்டு யானைகளில் ஒன்றான கர்ப்பிணி யானை செவ்வாய்க்கிழமை இறந்துவிட்டது. அதன் பிரேத பரிசோதனை ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள நிலையில் மற்றொரு யானை புதன்கிழமை இறந்ததுள்ளது.
"யானைகள் உலாவும் இப்பகுதியில் உள்ள ஒரே ஒரு குளம் தான் உள்ளது. மர்ம நபர்கள் யாரோ வேண்டுமென்றே விஷம் கலந்து வைத்ததாக தெரிகிறது, யானைகள் அந்த தண்ணீரை உட்கொண்டு விஷம் காரணமாக இறந்தன" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.