சென்னையை அலறவிடும் கொரோனா... களத்தில் பீலா ராஜேஷ் அதிரடி!.. பக்கா ப்ளானோட வந்திருக்காங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆராய மருத்துவக்கல்வி இயக்குனரகம், பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
* இதுவரை உயிரிழந்தவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பதை இந்த குழு ஆராயும்.
* கொரோனா இறப்பு விகிதம், எண்ணிக்கை குறித்து அரசு வெளிப்படையாக தகவல்களை வெளியிடுகிறது.
* கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
* அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக செவிலியர்கள் நியமிக்கப்படுவர்.
* சென்னை அரசு மருத்துவமனைகளில் 1,563 சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்தியுள்ளோம்.
* அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் உள்ளன. அதனை 10,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* தேவைக்கேற்ப மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவர் எனவும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறினார்.

மற்ற செய்திகள்
