‘காசு இல்ல, 1000 ரூபாய் தருவீங்களா...?’ ‘அப்படியா, சீக்கிரம் வாங்க தரேன்....’ நடிகை வீட்டில் நகை திருடியவரை பிடிக்க போடப்பட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 09, 2020 03:37 PM

மலையாள நடிகை ஜெயபாரதியின் வீட்டில் பணிபுரியும் காவலாளி மற்றும் கார் ஓட்டுனர் இணைந்து 31 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The cops who planned to steal jewelry at the actress\'s house

தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்டோரோடு ஜோடியாகவும், குணசித்திர நடிகையாகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் மலையாள நடிகை ஜெயபாரதி. இவருக்கு சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் தெருவில் சொந்த வீடு உள்ளது. மலையாளத்தை பூர்விகமாக கொண்டுள்ளதால், சென்னையில் ஏதாவது ஷூட்டிங் இருக்கும் போது மட்டும் வந்து தங்கிவிட்டு செல்லும் வாடிக்கையைக் கொண்டிருந்தார். இதனால் நேபாளத்தைச் சேர்ந்த காவலாளி ஹர்க்பகதூர் என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன் ஜெயபாரதி தன் வீட்டில் காவலாளியாக வேலைக்கு சேர்த்துள்ளார்.

ஜெயபாரதியின் கார் ஓட்டுநர் இப்ராஹிம் அவ்வப்போது அவரது வீட்டில் உள்ளவர்களை அழைத்து செல்வதற்காக சென்னை வந்து சென்றபோது ஹர்க்பகதூருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இப்ராஹிம் ஹர்க்பகதூருக்கு நடிகையின் வீட்டில் உள்ள நகை திருடும் யோசனையை கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக சுமார் 31 சவரன் நகைகளை ஹர்க்பகதூர் திருடி இருக்கிறார்.

ஒரு நிகழ்வுக்காக இரு தினங்களுக்கு முன் சென்னை வந்த நடிகை ஜெயபாரதி, நிகழ்ச்சிக்கு அணிய நகைகளை தேடும் போது லாக்கரில் நகைகள் ஏதும் இல்லாததை கண்டு அதிர்ந்து போயுள்ளார். இதை அடுத்து அவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் திருட்டு குறித்து புகார் அளித்துள்ளார்.

மேலும் திருட்டு நடைபெற்றது தெரிய வருவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பாக தன்னுடைய சகோதரருக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி தான் தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்ல இருப்பதாக ஹர்க்பகதூர் ஜெயபாரதியிடம் விடுப்பு கேட்டு சென்றுள்ளார். இதை அறிந்த போலிசாருக்கு ஹர்க்பகதூர் மேல் சந்தேகம் அடைந்துள்ளனர்.

ஹர்க்பகதூர் தேடி வந்த போலிசார் அவரது போனை டிராக் செய்வதை அறியாமல் ஜெயபாரதி வீட்டில் பணிபுரியும் மற்றொரு கார் ஓட்டுநர் ஒருவருக்கு போன் செய்து ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். சாமர்த்தியமாக பேசிய மற்றொரு கார் ஓட்டுநர் ஹர்க்பகதூரை போலிசார் சொன்ன இடத்திற்கு காசு தருவதாக சொல்லி வரவழைத்து சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவத்திற்கு உதவி செய்த இப்ராஹிமையும் கைது செய்தனர்.

திருடிய நகைகளை அடகு கடையில் விற்றதை அறிந்த போலிசார் அங்கிருந்து நகைகளை மீட்டு ஜெயபாரதியிடம் ஒப்படைத்துள்ளனர். மிக விரைவாக நகைகளை மீட்டு தந்தும், குற்றவாளிகளை கைது செய்த நுங்கம்பாக்கம் போலீசாரை பார்த்து நன்றி கூறிவிட்டு சென்றார் நடிகை ஜெயபாரதி.

Tags : #GOLD