வெலைய 'பார்த்தாலே' ஷாக்கடிக்குது... தொடர்ந்து 'எகிறும்' தங்கம்... இதுக்கெல்லாம் காரணம் 'அந்த' நோய் தானாம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 26, 2020 04:11 PM

சமீபகாலமாக நடுத்தர குடும்பங்களை அதிகம் வேதனைக்குள்ளாகிய விஷயம் என்னவென்றால் அது தங்கத்தின் விலை உயர்வு தான். அதிகபட்சமாக கிராம் 4 ஆயிரம் ரூபாயைத் தாண்ட நிச்சயம் செய்த திருமணத்தை தள்ளி வைக்கலாமா? என்று கூட பலரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். எனினும் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சற்றே கீழிறங்க ஆரம்பித்து இருக்கிறது.

Coronavirus is the main reason for Gold Price Hike?

அப்படியே தொடர்ந்து குறைந்து கொண்டே வரணும் என பலரும் தங்களது இஷ்ட தெய்வத்தினை வேண்டிக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றனர். மறுபுறம் இதற்கு மேல் விலை உயராமல் இருந்தாலே போதும் என மக்கள் வாய்விட்டே புலம்ப ஆரம்பித்து உள்ளனர். இன்று (பிப்ரவரி 26) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,061 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.4,092 ஆக இருந்தது. நேற்றைய விலையிலிருந்து இன்று 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 32,736 ரூபாயிலிருந்து இன்று 32,488 ரூபாயாகக் குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு 248 ரூபாய் குறைந்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயருவதற்கு காரணம் கொரோனா வைரஸ் தான் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக சர்வதேச சந்தையில் தோல் மற்றும் தோல் சார்ந்த முதலீடுகள் வெகுவாக பாதித்து, தங்கத்தின் மீது முதலீடுகள் குவிய ஆரம்பித்து இருக்கிறது. இதனால் தான் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறதாம்.

 

Tags : #CORONAVIRUS #GOLD