'லவ் பண்ணுன பொண்ணு வீட்லையே இறந்து கிடந்துருக்கார்...' 'கஞ்சா அடிக்ட்ன்னு தெரிஞ்ச உடனேயே விலகிட்டேன்...' பதபதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூரில் இளைஞர் ஒருவர் தான் காதலித்த பெண்ணின் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
![The body of a young man rescued from his girlfriend\'s house The body of a young man rescued from his girlfriend\'s house](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/the-body-of-a-young-man-rescued-from-his-girlfriends-house.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வ.உ.சி தெருவில் வசித்து வரும் அன்பழகன் என்பவரின் சடலம் அரங்கநாதர் தெருவில் வசிக்கும் அவரது நண்பரின் வீட்டில் இருந்துள்ளது. அதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்பழகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்த விசாரணையில் ஈடுபட்ட போலீசார் முதற்கட்டமாக கொத்தனாரான சிறுமியின் தந்தைக்கும் அன்பழகனுக்கும் பணியிடத்தில் நட்பு இருந்துள்ளது என கண்டறிந்துள்ளனர்.
மேலும் சிறுமியின் தந்தையின் நட்பை பயன்படுத்தி அன்பழகன் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் யாருக்கும் தெரியாமல் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியும் அன்பழகனும் பழகி வந்துள்ளனர்.
இதனிடையில், அன்பழகன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அறிந்த சிறுமி அவரின் நடவடிக்கை பிடிக்காமல் அவரிடமிருந்து விலகியுள்ளார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாத அன்பழகன் அவர்கள் காதலிக்கும் போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை எல்லாம் காட்டி சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாரை மிரட்டியுள்ளார்.
தற்போது தலைமறைவாக இருந்த சிறுமி, அவரது தந்தை, தாய் மற்றும் அண்ணன் ஆகியோரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)