'தனியார் மருத்துவமனையில் எவ்வளவு'?... 'நிர்ணயிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்'... வெளியான அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 15,762 பேர் குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களைத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி சாதாரணமாகப் பாதிப்படைந்த நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணமாக வசூலிக்கலாம். தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம். இதனிடையே தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதிகபட்ச கட்டணம் என்பதால், நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
