"தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு".. "சென்னையில் மட்டும் மாற்று முடிவு!"- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 05, 2020 11:50 AM

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,568 ஆகவும் உயர்ந்துள்ள சூழலில், சென்னையில்  நாளை மறுநாள் டாஸ்மாக் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

tasmac shops will not be opened in chennai from May 7

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சில தளர்வுகளுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பச்சை மண்டலங்களில் மதுபானக்கடைகள் மே 7-ஆம் தேதி, சில நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தனிமனித இடைவெளி, நேர நிர்ணயம் உள்ளிட்ட பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு மே 7-ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மாநகரக் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியான சென்னையை பொருத்தவரை நாளை மறுநாள் டாஸ்மாக் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட மற்றும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் பகுதிகளில் கொரோனா பரவல் எவ்விதம் உள்ளது குறித்த ஆய்வினை சென்னை மாநகரப் பெருநகராட்சி கணக்கிட்டு வருவதால், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுவதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.