'பொது இடங்களில்' வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 'புதிய யுக்தி'... 'டி.ஆர்.டி.ஓ.,-வின் அசத்தல் கண்டுபிடிப்பு...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | May 05, 2020 08:18 AM

விமான நிலையம், வணிக வளாகம், 'மெட்ரோ' ரயில் நிலையம், ஓட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், புற ஊதா கதிர்கள் மூலம், கிருமி நீக்கம் செய்யும், கோபுரத்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி அசத்தியுள்ளது..

DRDO Discover disinfect the tower by ultraviolet light

மக்கள் கூட்டத்தைக் கட்டப்படுத்த முடியாத, அதிக மக்கள் வந்து செல்லக் கூடிய பொது இடங்களான விமான நிலையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் போன்ற பகுதிகளில் கிருமி நாசினிகள் மூலம் கிருமி நீக்கம் செய்வது என்பது சவாலான காரியமாகும்.

இதுபோன்ற பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக மாற்றும் நடவடிக்கையாக புதிய கண்டுபிடிப்பு ஒன்றை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி அசத்தியுள்ளது. 'அல்ட்ரா வைலட்' எனப்படும் புறா ஊதா கதிர்கள் மூலம் இயங்கும் கோபுரங்களை இப்பகுதிகளில் அமைப்பதன் மூலம், சுலபமாக கிருமி நீக்கம் செய்யும் யுக்தியை டி.ஆர்.டி.ஓ., உருவாக்கி உள்ளது.

யு.வி., பிளாஸ்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கோபுரம், 12க்கு 12 அடி அளவுள்ள இடத்தை, 10 நிமிடங்களில் கிருமி நீக்கம் செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. 400 சதுர அடி இடத்தை, 30 நிமிடங்களில் சுத்தமாக்கும் திறன் கொண்டது. இதை, 'வைபை' தொழில்நுட்ப உதவியுடன் இயக்க முடியும் என, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர்.