தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா!.. ஒரே நாளில் 527 பேருக்கு தொற்று உறுதி!.. என்ன காரணம்?.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 04, 2020 05:52 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tamil nadu coronavirus covid19 statistics as on may 4

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை  1,409 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 2,107 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போதுவரை 1,53,489 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இன்று பதிவாகியுள்ள 527 பேரில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.