'இந்த மருந்து கொரோனாவ கண்ட்ரோல் பண்ணுது...' '11 நாளில் சரி ஆயிடுறாங்க...' 'எனர்ஜியும் நல்லாவே கிடைக்குது...' தொற்றுநோய் தலைவர் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸிற்கு எதிராக ரெம்டெசிவியர் மருந்து நன்றாக செயல்படுவதாகவும், 11 நாட்களிலேயே கொரோனாவிலிருந்து விடுபடுகின்றனர் என்று கூறியுள்ளார் அமெரிக்காவின் தொற்றுநோய் அமைப்பின் தலைவர்.

கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒரு சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆனது டிசம்பர் மாதம் முதல் பரவி வரும் இந்த கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இன்னும் பரிசோதனை அளவிலேயே இருக்கின்றன.
இந்நிலையில் ஹைட்ராசில் குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது என அமெரிக்கா கூறியது. ஆனால் இந்த மருந்தால் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளும், பலர் தங்களது உயிரையும் இழந்தனர்.
தற்போது அமெரிக்காவின் தொற்றுநோய் அமைப்பின் தலைவர் அந்தோனி பவுச்சி வெளியிட்ட அறிக்கையில் 'ரெம்டெசிவியர்' எனும் மருந்து கொரோனா நோயாளிகளை 31% விரைவாக குணப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதித்த சுமார் 1000 பேருக்கு ரெம்டெசிவியர் மருந்தைக் கொடுத்ததில், அவர்கள் 11 நாள்களில் குணமடைந்ததாகவும் கூறினார். மேலும் எவ்வித மருந்தையும் உபயோகிக்காதவர்கள் குணமடைய சுமார் 15 நாட்கள் எடுத்துக்கொண்டனர் எனவும் கூறியுள்ளார்.
இந்த 'ரெம்டெசிவியர்' மருந்து முழுவதுமாக கொரோனாவிற்கு தடுப்பு மருந்து ஆகாது ஆனால் குணமடையும் வேகத்தை 31 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்ற ஒப்பீட்டையும் அளித்துள்ளார். அமெரிக்கா மட்டும் அல்லாது பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலரும் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது கொரோனாவுக்கு எதிரான ஆற்றலை உடலுக்கு அளிப்பதாக பரிந்துரைத்துள்ளனர்.
