மதுபானத்துக்கு 70% சிறப்பு 'கொரோனா' கட்டணம்... அதிரடியாக 'அறிவித்த' மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமதுபானத்துக்கு 70% சிறப்பு கொரோனா கட்டணம் விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு வருகின்ற 17-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
நீண்ட நாட்களுக்கு பின் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுபான பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில் மதுபானங்களுக்கு 70% சிறப்பு கொரோனா கட்டணம் விதிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி அரசு, ''மதுவுக்கு சிறப்பு கொரோனா கட்டணமாக 70 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மது விலை கணிசமாக உயரும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும்,'' என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே 7-ம் தேதி டாஸ்மாக்குகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
