‘2-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை’... 'இந்தியாவில்'... 'மகிழ்ச்சியுடன் கூறிய 2 மாநிலங்கள்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் 2-வது நாளாக இரண்டு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாதது நம்பிக்கை அளித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று பதிவான கேரளாவில், கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்கள் அல்லது அதற்கு சற்றும் கூடுதலான எண்ணிக்கையிலேயே இருந்தது. நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. இந்த நிலையில், 2-வது நாளாக கேரளாவில் இன்று புதிதாக கொரோனா நோய்த்தொற்று யாருக்கும் பதிவாகவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட 34 -பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒருநாளில் மட்டும் 61 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 462 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதேபோல், ஜார்கண்டிலும் 2-வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. அங்கு மொத்தம் 115 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
#COVID19 Update | May 4
Well, the curve has flattened.
No new cases.
61 recoveries.
Active cases down at 34.
📍No new hotspots
👥21,724 under observation
🧪 33,010 samples tested; 32,315 -ve
🔎 2431 samples covered in sentinel surveillance pic.twitter.com/fxmJuXOPjo
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 4, 2020
