சென்னை ஆவின் ‘பால்பண்ணை’ ஊழியர்கள் 2 பேருக்கு ‘கொரோனா’ தொற்று..! வெளியான அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஆவின் பால்பண்ணையில் பணியாற்றும் 2 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாதாவரம் பகுதியில் அமைந்துள்ள ஆவின் பால்பண்ணை மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 2.38 லட்சம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றுமின்றி திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சேலத்திற்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஆவின் பால்பண்ணையில் பணிபுரியும் இரண்டு தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா அச்சம் காரணமாக நேற்றிரவு முதல் பணியாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. மக்களின் அத்தியாவசிய பொருளான பால் பாக்கெட்டுகளை தயாரிக்கப்படும் ஆவின் பால்பண்ணை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
