குக்கரை வைத்து மட்டையாவது எப்படி?.. ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. திருள்ளூரில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 04, 2020 05:14 PM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், யூ டியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சியதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

two youth booked for allegedly manufacturing spirit

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்தே கள்ளச் சாராயம் உற்பத்தி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மதுக் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருப்பதால் மது பிரியர்கள் அதிக விலை கொடுத்து கள்ளச் சாரயத்தை வாங்கி வந்தனர். இது தொடர்பாக திருவள்ளூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியில் சாராயம் காய்ச்சியதாக கூறி காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், யூ டியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த இரு இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.